Wednesday, August 4, 2021

இவர்கள் இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சியா???…!ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!!

Must Read

விஜய் டிவியில் மக்களின் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதன் அடுத்த சீசன் மக்கள் மத்தியில்  அதிக அளவு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் அதில் இருக்கும் கோமாளிகள் தான். இதில் பெரும்  பங்கு வகிப்பது புகழ், ஷிவாங்கி மற்றும் பாலா என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது புகழ் மற்றும் ஷிவாங்கி அடுத்த சீசனில் இல்லை என்பது போன்றதொரு தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்த போதிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் விரும்பி பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த வகையில் அதில்  நகைச்சுவைக்கு எந்த வித பஞ்சமும் இருக்காது. அந்த நிகழ்ச்சியில் வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, மணி மேகலை உள்ளிட்ட பல கோமாளிகள் ஒவ்வொரு சீசன் குக்களிடமும் செய்யும் சேட்டை அளவில்லாதது. மேலும் துளி அளவு கூட சமையல் பற்றி தெரியாத அவர்களை சமாளித்து குக்களும் பெரும் அளவில் போராடி தங்களின் சமையல் திறமையை நிரூபிப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சீசனில் கனி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வெற்றி வாகை  சூடினார். அதையடுத்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் உருவாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவ காரணம் அதில் இருக்கும் குறிப்பிட்ட கோமாளிகள் செய்யும் நகைச்சுவைகள் தான். அந்த வகையில் புகழ், ஷிவாங்கி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

தற்போது உருவாகி கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் இவர்கள் இருவரும் பல காரணங்களால் வரமாட்டார்கள் என்ற ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வெளியான இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத ஒன்றே.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கண்ணன் காரைக்குடியில் இருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்கும் பிரஷாந்த் – பரிதவிப்பில் ஐஸ்வர்யா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரஷாந்துக்கு கண்ணனின் நண்பன் மூலம் கண்ணன் ஐஸ்வர்யா காரைக்குடிக்கு செல்லும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் கஸ்தூரி வீட்டில் கத்திகொண்டுள்ளார். பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -