குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த இரண்டு விஜய் டிவி பிரபலங்களா?? அப்டேட்டை கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புகழை பெற்று வந்தது. இந்நிலையில் அதில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே அதிக பிரபலமடைந்தது. சமைக்கிறேன் என்ற பெயரில் கோமாளிகள் செய்யும் அட்டகாசங்கள் தான் இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம். நிஷா, ரக்சன், புகழ், பாலா, ஷிவாங்கி தான் இதில் பிரபலமடைந்தனர்.

அதிலும் ஷிவாங்கி, அஸ்வின் காம்போ வேறு லெவல். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பிரபலமடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தான் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அஸ்வின், பவித்ரா மற்றும் தர்ஷா குப்தா தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளனர்.

அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இப்பொழுது அடுத்த சீசன் எப்பொழுது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்த நிலையில் அது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே ஜி.பி .முத்து இதில் கலந்துகொள்ள போகிறார் என்ற செய்தி வெளியானது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் தனம் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்த ஷியாம் இதில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here