குக் வித் கோமாளியின் இருந்து விலகும் முக்கிய கோமாளிகள் – இதுதான் காரணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாகி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த சீசனில் 2 முக்கிய கோமாளிகள் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் இதனுடைய டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் ஷோ ஆரம்பிக்க தாமதமாகும் என்பதால் ஆரம்பித்தார்களாம். ஆனால் இந்த ஷோ அனைத்து நிகழ்ச்சியையும் தட்டி தூக்கியது.

தற்போது வரை அனைவரின் சிரிப்புக்கு இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட இப்படி ஒரு டாஸ்க் கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த டாஸ்கில் கோமாளிகள் செய்யும் அட்டகாசங்கள் தான் அல்டிமேட். ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா போன்றோர் தான் கோமாளிகளில் அதிக பிரபலாமடைந்தது. இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் குக் வித் கோமாளி போர் தான்.

மக்கள் அனைவரும் இப்படி நினைத்துக்கொண்டிருக்க தற்போது ரசிகர்களை அதிர்ச்சியளிக்கும் வகையில் செய்திகள் பரவி வருகிறது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 3 இல் ஷிவாங்கி மற்றும் புகழ் கலந்து கொள்ளவில்லையாம். ஏனெனில் பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இதில் கலந்துகொள்ள நேரமில்லையாம். இதனை கேட்ட பலரும் வேதனையடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here