மாஸ் கெட்டப்பில் குக் வித் கோமாளி அஸ்வின் – இது தான் விஷயமா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அஸ்வின். தற்போது புதிய கெட்டப்பில் உருமாறி இருக்கும் அஸ்வின் தனது புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அஸ்வின்

நடிப்பின் மீது இருந்த ஆசையில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்தவர் தான் அஸ்வின். சென்னையில் தெரிந்தவர்கள் கூட இல்லாமல் எதோ ஒரு நம்பிக்கையில் வந்தவர்  ஆரம்பத்தில் பல கஷ்டங்களை தாண்டி ஷார்ட் பிலிம்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் நடித்த காதல் ஒன்று கண்டேன் படம் செம ஹிட் அடித்தது. அதுவும் அந்த பாடலுக்காகவே இந்த ஷார்ட் பிலிம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தான் குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார். இத்தனை நாட்கள் அவர் கஷ்டப்பட்டதிற்கான பலன் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்தது.

இன்ஸ்டாவில் 1 மில்லியன் பாலோவர்ஸ் தொடும் அளவிற்கு முன்னேறினார். மேலும் பல படங்களில் நடிக்க அஸ்வின் கமிட்டாகியுள்ளார். ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவிற்கு வர முடியுமா?? என்று யோசித்தால் அது கஷ்டம் தான். ஆனால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இறுதி சுற்றில் கூட சிம்பு இத்தனை நாள் அஸ்வினை ஏன் இந்த திரையுலகம் பார்க்கவில்லை என்றும் வருத்தப்பட்டார். பல பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வருகிறார். அதாவது அழகான ஆண், அதுவும் சமைக்க தெரிந்தவர், பொறுமைசாலி இதை விட ஒருவருக்கு என்ன வேண்டும் நல்ல கணவராக இருக்க??

இதனால் தான் இளசுகள் பலரும் அஸ்வினை வட்டமிட்டு வருகின்றனர். தற்போது புதிய கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ஒருவேளை புதிய படத்திற்காக இருக்குமோ என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here