எப்படி கொழுகொழுனு இருக்கீங்க அஸ்வின்?? ட்ரெண்டாகும் அஸ்வின் கல்லூரி புகைப்படங்கள்!!

0

‘குக் வித் கோமாளி’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் குமாரின் கல்லூரி வயது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அஸ்வின் குமார்

விஜய் டிவியில் வெளியான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் அறிமுகமானவர் அஸ்வின். அதற்கு முன்னமே மணிரத்னம் படத்தில் ஒரு சிறிய ரோலில் அஸ்வின் நடித்திருப்பார். அதுவும் ஒரு ஓரமாக நிற்கும் சீன் தான் அது. அந்த புகைப்படம் கூட இணையத்தில் ட்ரெண்டானது. சிறு வயதிலேயே நடிக்கும் ஆசையில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்தவர் அஸ்வின். அவருக்கு சென்னையில் யாரையுமே தெரியாதாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது திறமையை மட்டுமே நம்பி வந்துள்ளார். அவர் சென்னைக்கு வந்து முதன் முதலில் சந்தித்தது சிவகார்த்திகேயனைதானாம். இதனை அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே சொல்லி இருப்பார். மேலும் பல ஷார்ட் பிலிம்ஸ், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருப்பார். ஆனாலும் அவருக்கு அந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு ரஜினிகாந்திற்கு தலைவர்கள் வாழ்த்து – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

‘காதல் ஒன்று கண்டேன்’ என்ற படத்தில் நடித்தார். அந்த ஷார்ட் பிலிம் செம ஹிட் அடித்தது. அதன் பிறகும் அஸ்வின் என்றால் அனைவர்க்கும் தெரியும் அவ்வளவு தான். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கால் பதித்த பிறகு தான் அவருக்கு பட்டிதொட்டியெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அவரது அந்த அழகான சிரிப்பும், அந்த ரியாக்சனும் பலரையும் கட்டிப்போட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அவர் நடித்த ஆல்பம் சாங் ‘குட்டி பட்டாஸ்’ மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. தற்போது அஸ்வினின் கல்லூரி புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here