‘அப்பவே நீங்க விஜய் டிவியில இருந்தீங்களா அஸ்வின்’ – வைரலாகும் புகைப்படம்!!

0

தற்போது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே விஜய் தொலைக்காட்சியில் என்ன செய்தார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

நடிகர் அஸ்வின்

விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக, நடிகையாக, தொகுப்பாளராக அறிமுகமாகும் பலர் தான் இன்று தமிழ் சினிமாவில் சாதித்து கொண்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் தான், அஸ்வின். சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவை மாநகரில் இருந்து சென்னை சென்றவர் தான், அஸ்வின். இவர் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

‘ரிஷாப் பாண்ட்டின் செயல் எனக்கு பிடிக்கவில்லை’ – கடுப்பான ரிக்கி பாண்டிங்!!

இவர் நடித்த அனைத்து குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனாலும், இவருக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தது. இவரை பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இப்படியாக இருக்க, இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நன்றாக சமைக்கும் திறன் இருந்ததாலும், அனைவர் இடத்திலும் நன்றாக பழக கூடிய குணம் இருந்ததாலோ என்னவோ மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. இப்படியாக இருக்க இவர் இதே விஜய் டீவியில் சில ஆண்டுகளுக்கு முன்பாக “ரெட்டை வால் குருவி” என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியல் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாகவே அஸ்வின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது பிரபலமாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here