படத்திற்காக தர லோக்கல் கெட்டப்பிற்கு மாறிய அஸ்வின் – விஜய்க்கே சவால் விடுவாரு போலையே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தனது புது படத்திற்கான கெட்டப் உடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டவர் தான் அஸ்வின். படவாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருந்த அவருக்கு இந்த நிகழ்ச்சி பெரிய பாலமாக அமைந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். ஒரே நிகழ்ச்சியில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கிக்கும், இவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து போகவே இருவரையும் வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். முதல் சீசனை விட இந்த இரண்டாவது சீசன் களைகட்டியது.

ஆரம்பத்தில் எவ்வளவு ஷார்ட் பிலிம்களில் நடித்தும் அஸ்வினுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கிட்ட தட்ட 5 வருடங்களுக்கு மேலாக அவர் போராடி வருகிறார். கோயம்புத்தூரில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தவருக்கு இவ்வளவு போராட்டத்திற்கு பிறகு தான் வாய்ப்பே கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கும் அஸ்வின் அந்த படத்திற்கு புதிய விதமான கெட்டப்பில் மாறியுள்ளார். முழுவதுமாக தர லோக்கலில் தாடி கைலியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here