குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்குகிறதா?? வட்டாரத்தில் இருந்து கசிந்த தகவல்!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 3வது சீசன் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி முதல் சீசனில் இருந்தே சக்கை போடு போட்டது. சாதாரணமாக சமையல் என்று ஆரம்பிக்கப்பட்டு கொஞ்சம் காமெடியையும் உள்ளே சேர்க்க இந்த காம்போ மக்களுக்கு பிடித்து போனதால் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் அடுத்த சீசன் அதிரடியாக வந்து முந்தைய சீசனையே மறக்கடித்தது.

இப்பொழுது மறுபடியும் லாக்டவுன் என்று ஆரம்பித்ததால் தான் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் சற்று தாமதமாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளது.

கடந்த வருடமும் இதே போல தான் லாக்டவுன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதே போல பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களுக்கு பிறகு குக் வித் கோமாளி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அக்டோபர் 10 தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here