என்னங்க கடைசியில இங்கையும் வந்துடீங்க – காங்கிரஸ் மனித உரிமை துறையில் குக் வித் கோமாளி பிரபலம்!!

0

சினிமா துறையில் இருந்து தற்போது அரசியலுக்கு பலரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஷகிலாவிற்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் தங்கள் கவலைகளை மறந்து வயிறார சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகர்கள் என்றால் புகழ், ஷிவாங்கி, பாலா மற்றும் மணிமேகலை என்று தான் சொல்லவேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம் இவர்கள் அனைவரும் தான் இந்த நிகச்சியில் நகைச்சுவை இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் செய்யும் அலப்பறைகள் அனைத்தும் மக்களை எளிதாக கவர்ந்து வருகிறது. சினிமாவில் கலக்கிய ஷகிலா இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவரது அடையாளமே மாறியுள்ளது. தற்போது அனைவரும் ஷகிலாவை அம்மா என்று தான் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் புகழ் தான்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

புகழின் செயலால் தான் ஷகிலா இந்த நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் அடைந்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் ஷகிலா சில தினங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் திடிரென்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் சேர்ந்த ஷகிலாவிற்கு மாநில பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் ஷகிலாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here