குக் வித் கோமாளியில் மோதிக்கொள்ளும் வனிதா, பாபா மாஸ்டர் – பல அட்டகாசங்களுடன் வெளியான ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது வனிதா, ரம்யா பாண்டியன் மற்றும் உமா ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 2 பிரிவாக பிரிந்து சமையல் போர் நடக்கவுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

‘குக் வித் கோமாளி’ மக்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குக் வித் கோமாளியால் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியுள்ளது. புகழ், ஷிவாங்கி மற்றும் மணிமேகலை காமெடி நாளுக்கு நாள் வேற லெவெலில் போயிக்கொண்டுள்ளது.

இப்படி வாரத்திற்கு வாரம் பல கலாட்டாக்களுடன் வெளியாகும் நிகழ்ச்சியில் இந்த வாரம் சூடுபிடிக்கும் எபிசோடாக சீசன் 1 இல் கலந்து கொண்ட வனிதா, ரம்யா பாண்டியன், ரேகா மற்றும் உமா ரியாஸ் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வாரம் செலிப்ரேஷன் சுற்றாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் கோமாளி தான் குக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் வனிதா இடையே பெரிய போட்டியே நிகழ்ந்துள்ளது. இந்த வாரத்தில் சீசன் 1க்கும் சீசன் 2க்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது.

வனிதா மாஸ்டரிடம் வாய் சண்டைக்கு போக உங்களை விட நான் 10 மடங்கு டேஞ்சர் என்று சொல்ல அதற்கு மாஸ்டர் நான் பல மடங்கு டேஞ்சர் என்று சொல்ல அரங்கமே அதிர்கிறது. மேலும் புகழை மாஸ்டர் மற்றும் அஸ்வின் ஆளாளுக்கு தன் பக்கம் இழுக்க ஒரே காமெடி தான்.

சசிகலாவை சந்தித்த சீமான், பாரதிராஜா – பரபரப்பாகும் அரசியல் களம்!!

மேலும் ஷிவாங்கி யாருடன் ஜோடி சேர போகிறார் என்பது தான் தெரியவில்லை. இந்த ப்ரோமோ வெளியான சிறிது நேரத்தில் எக்கச்சக்க வியூஸ் அள்ளியுள்ளது. இந்த வாரத்தில் தான் தெரியும் பாபா மாஸ்டரா? இல்ல வனிதாவா? என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here