‘லெஜண்ட்ஸ் லைக் ஷகிலா’ – வேற லெவெலில் காமெடி செய்த பாலா!! தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவி என்றாலே அது சீரியலை விட நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அழைப்பதுண்டு. விஜய் டிவி நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்றே சொல்லலாம். அப்படி பட்ட ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது விஜய் டிவி இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாணி போஜன் கெஸ்ட்டாக வருகிறார்.

குக் வித் கோமாளி

போன வருடத்தில் ஆரம்பித்த குக் வித் கோமாளி பல ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளையடித்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சிக்காகவே சனி, ஞாயிறு கிழமை எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அதிகம். புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா போன்றோர் அல்டிமேட் காமெடி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஷோவை பார்த்து சிரித்தே வயிறு வலிவந்தவர்களும் உண்டு. ஷிவாங்கியும் வெகுளியான நடவடிக்கையும் புகழின் காமெடியும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பலம். இந்த நிகழ்ச்சியின் மூலமே புகழ் பிரபலமடைந்தார். ரம்யா பாண்டியனுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த குக் வித் கோமாளி அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று இருந்தவர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளிக்கும் விதமாக சடாலென ஆரம்பிக்கப்பட்டது. யார் வரப்போகிறார்கள் என கற்பனை செய்ய முடியாமல் இருந்தது. போன சீசனில் ரம்யாவை போல இந்த சீசனில் அஸ்வின்.

அஸ்வினை பார்த்து பலரும் ஜொள்ளுவிட தான் செய்கின்றனர். அதுவும் ஷிவாங்கி சொல்லவே வேண்டாம். இந்த வாரமும் அஸ்வினுடன் ஷிவாங்கி தான் இணைகிறார். நேற்று குக் வித் கோமாளியின் ப்ரோமோ வெளியானது. அஸ்வினக்காக மாங்கு மாங்கென உழைக்கிறார் ஷிவானி.

இதனை பார்த்து சிரிப்பு வந்தாலும் ஒரு கட்டத்தில் இது கியூட்டாகவே இருந்தது. மேலும் தற்போதும் ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது. முதல் ப்ரோமோவிலேயே பாலா தான் அல்டிமேட்.

இந்த வாரத்தில் கெஸ்ட்டாக வாணிபோஜன் வந்துள்ளார். Kids likes Pavithra, Men’s likes Vani Bhojan, Legends likes Shakeela என தெறிக்க விட்டுள்ளார் பாலா. இந்த வாரத்தில் இதுவரை இல்லாத விதமாக பல காமெடிகள் இருக்கப்போவது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here