4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி., உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி!!

0
4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடம்: வந்தந்திக்கு முற்றுப்புள்ளி., உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி!!
4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடம்: வந்தந்திக்கு முற்றுப்புள்ளி., உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி!!

அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் குறித்து முக்கிய தகவலை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உதவி பேராசிரியர்

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர்கான பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இணையத்தில் தவறான செய்திகள் உலா வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அறிவிப்பு தேர்வாணையம் வெளியிடுவது போல 48 பக்கத்தில் விரிவான விளக்கங்களுடன் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் வருகிற மே 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் “இந்த போலியான தகவலை யாரும் நம்ப வேண்டாம்.” என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 – என்னென்ன அறிவிப்புகள்?? Live Update

மேலும் அரசுக் கலை கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்க்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வெளிவரும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here