வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – வாடிக்கையாளர்களே கவனம்! அதிகாரிகள் கொடுத்த முக்கிய விளக்கம்!!

0
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை - வாடிக்கையாளர்களே கவனம்! அதிகாரிகள் கொடுத்த முக்கிய விளக்கம்!!
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை - வாடிக்கையாளர்களே கவனம்! அதிகாரிகள் கொடுத்த முக்கிய விளக்கம்!!

இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்களை பின்பற்றும் நிலையில், இந்த மாதம் தமிழகத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை:

மாதந்தோறும் வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம் ஆகும்.அந்த வகையில் நடப்பு மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு அக்டோபர் மாதத்தில் ஏராளமான விழாக்கள், பண்டிகைகள் வருவதால், இதை அடிப்படையாக வைத்து வங்கிகளுக்கு இந்த மாதம் 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த மாதம் 21 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்று இணையத்தில் வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கிகளில் தேசிய விடுமுறை மட்டுமே பொதுவானது. மற்ற விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும் என்பது நாம் அறிந்த ஒன்று.

தமிழக ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் – நாளை முதல் துவக்கம்! விலை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் நடப்பு மாதத்தில், 4ம் தேதி சரஸ்வதி பூஜை, 5ம் தேதி விஜயதசமி, 24ம் தேதி தீபாவளி என 3 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. இது தவிர, 2 வது மற்றும் 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. எனவே தமிழகத்தில் இந்த(அக்டோபர்) மாதம் ஒட்டுமொத்தமாக 10 நாட்கள் மட்டும் தான் வங்கிகளுக்கு விடுமுறை. ஆதலால் இணையத்தில் வெளியாகும் பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here