போலீசாருக்கு இனி வார விடுமுறை?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!!

0
போலீசாருக்கு இனி வார விடுமுறை?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!!
போலீசாருக்கு இனி வார விடுமுறை?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!!

போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வார விடுமுறை

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எந்த பண்டிகை நடந்தாலும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் போலீசாருக்கு மட்டும் விடுமுறை அளிப்பதே கிடையாது. இதனால் அண்மையில் கூட தமிழ்நாடு காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதாவது புதுச்சேரியில் ரூ.3 கோடி செலவில் ரோந்து வாகனம், ஆம்புலன்ஸ், வேன் என 33 புதிய வாகனங்களின் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்த் மோகன் என பலரும் கலந்து கொண்டனர்.

மெட்ரோ வில் ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா? அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!!

அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே போலீசாருக்கு திருமண நாள், பிறந்தநாள், குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இப்போது அவர்களுக்கு வார விடுமுறை அளிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here