‘ஹக் டே’ வீடியோ வெளியிட்டு பாஜக.,வினை கலாய்த்த காங்கிரஸ்..! ட்விட்டரில் வைரலான #HugDay..!

0

உலகம் முழுவதும் காதலர் தின வாரம் இந்த வாரத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஹக் டே (Hug Day) காதலர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த வீடியோவை வெளியிட்டு நாங்கள் எப்பொழுதும் அன்பை தான் விரும்புகிறோம் என தெரிவித்து உள்ளது.

டெல்லியில் மோசம்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி தனது சமூகவலைதள பக்கங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் #HugDay ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த வீடியோவை காங்கிரஸ் ட்வீட்டரில் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

மேலும் இந்த வீடியோவுடன் ராகுல் காந்தி பேசிய சில வீடியோ தொகுப்புகளையும் இணைத்து வெளியிட்டு உள்ளது. அந்த பதிவில் ‘காங்கிரஸ் கட்சி எப்போதும் அன்பின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உள்ளது, வெறுப்பின் மீது அல்ல’ என தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here