கொரோனா தடுப்பூசி போடுவதில் நிலவும் குழப்பங்கள்…!அதிர்ந்து போன மக்கள்!!!

0

கொரோனா தொற்று நாடு முழுவதும் காட்டு தீயாக பரவி நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் அந்த தொற்றில் இருந்து காக்க அனைத்து  தரப்பினரும் தடுப்பூசியை நாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில்  தடுப்பூசி போடுவதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி உள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கும்   கூட அது செலுத்தி கொண்டதற்கான குறுந்செய்தி அனுப்பட்டு உள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  கடந்த ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது. அதன் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 17 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தது. இருப்பினும் இதில் பல குழப்பங்கள் நிகழ்ந்தது தற்போது  அம்பலமாகி உள்ளது.

அதாவது , வேதாந்த் டாங்கரே என்ற 13 வயதான உடல்  ஊனமுற்ற சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக SMS வந்துள்ளது. இதை  கண்டு அவனது தந்தை அதிர்ச்சிக்குள்ளாகினர். அதே போல் ,சத்னாவில் உள்ள சைனேந்திர பாண்டே என்பவருக்கு, அவருக்கு எந்தவித சம்பந்தமும்  இல்லாத 3 நபர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான செய்தி வந்துள்ளது.

மேலும் இது போன்று ,நுசாத் சலீம் என்ற 46 வயதான பெண்ணும் தடுப்பூசி போடாத நிலையில் அவருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான  குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த SMS கண்டு அந்த பெண் அதிர்ந்து போனார். இது போன்ற சம்பவங்கள் மத்திய  பிரதேசத்தின் பல பகுதிகளில் நிகழ்ந்து உள்ளது. இது குறித்து அந்த மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here