தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., பா.ம.க.ராமதாஸ் வலியுறுத்தல்!!!

0
தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., பா.ம.க.ராமதாஸ் வலியுறுத்தல்!!!
தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., பா.ம.க.ராமதாஸ் வலியுறுத்தல்!!!

கடந்த 8 ஆண்டுகளாக போராடி வரும் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

அகவிலைப்படி நிறுத்தம்:

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி வருடத்திற்கு இருமுறை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கியது. ஆனால் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 வருடமாக வழங்கப்படவில்லை என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். அதாவது தமிழக போக்குவரத்து துறையில் 88,000 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி இதுவரை வெளியிடப்படவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுகுறித்த பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை பொருட்படுத்தாத தமிழக அரசை கண்டித்து அவமதிப்பு வழக்கும் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இதில் கடந்த நவம்பர் மாதம் முதல் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்.., இனி தமிழக பாடத்திட்டம் தேவையில்லை?? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இதனால் காலங்கள் கடந்து போராடி வரும் ஓய்வூதியதாரர்களின் குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும் என வருகிற பட்ஜெட் தாக்கலிலாவது தமிழக அரசு குறிப்பிட வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இந்த நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here