தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் கணினி பில்லிங் முறை., கூடுதல் விலைக்கு இனி இடமில்லை!!!

0
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் கணினி பில்லிங் முறை., கூடுதல் விலைக்கு இனி இடமில்லை!!!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் கணினி பில்லிங் முறை., கூடுதல் விலைக்கு இனி இடமில்லை!!!

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக மது பிரியர்கள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிகாரிகள், அவ்வப்போது திடீர் சோதனையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த புகாருக்கு ஒரு நிரந்திர தீர்வு இல்லாததால் புதிய நடவடிக்கையை கையாள உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கேரள மாநில டாஸ்மாக் கடைகளை போல கணினி பில்லிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளனர். அதன்படி வாடிக்கையாளர்கள் கவுண்டர் 1ல் ஆர்டர் செய்து உரிய தொகையை செலுத்தி பில் வாங்க வேண்டும். 2வது கவுண்டரில் பில் கொடுத்து மது பாட்டில்களை வாங்கி கொள்ளலாம். இந்த நடைமுறை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டால் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தடுக்கப்படும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது என்னடா.., CWC பிரபலத்துக்கு வந்த அதிர்ஷ்டம்.., தமன்னாவுடன் ஜோடி சேரும் முக்கிய நபர்.., யார் தெரியுமா??

இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் உரிய அனுமதிகளை டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். எனவே கூடிய விரைவில் இத்திட்டம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட UPI வசதிகள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here