தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது – அதிரடி அறிவிப்பு !!!

0

நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது உத்தரபிரதேச அரசு மக்கள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த சில மாதமாகவே கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தினால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது.

தற்போது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வையும் மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியும் வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநில அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் எடவாடாவில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து மதுக்கடைகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் உரிய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுகொண்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here