மக்களே ஜாக்கிரதை.. மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம் கட்டாயம் – அரசு அதிரடி முடிவு!

0
மக்களே ஜாக்கிரதை.. மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம் கட்டாயம் - அரசு அதிரடி முடிவு!
மக்களே ஜாக்கிரதை.. மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம் கட்டாயம் - அரசு அதிரடி முடிவு!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தொற்று பரவலை தடுக்க டெல்லி புதிய உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

முகக்கவசம் கட்டாயம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக பரவி பேரழிவை ஏற்படுத்தியது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 16,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 53 பேர் உயிர் இழந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கூடுதல் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி முகக்கவசம் அணியாமல் டெல்லியில் பொது இடங்களுக்கு சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here