ஐயப்ப பக்தர்களே கவனம்., நாளை இரவு முதல் இதற்கு தடை., இது தெரியாம கோயிலுக்கு போகாதீங்க?

0
ஐயப்ப பக்தர்களே கவனம்., நாளை இரவு முதல் இதற்கு தடை., இது தெரியாம கோயிலுக்கு போகாதீங்க?
ஐயப்ப பக்தர்களே கவனம்., நாளை இரவு முதல் இதற்கு தடை., இது தெரியாம கோயிலுக்கு போகாதீங்க?

உலகப்பிரசித்தி பெற்ற கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க அணிகலன்களுடன் சுவாமி ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இதையடுத்து இன்று (ஜனவரி 18) கன்னிசாமிகளின் வரவை காண சுவாமி ஐயப்பன் சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மருந்து கடைகளுக்கு புதிய உத்தரவு., இது இல்லாமல் மாத்திரை தரக்கூடாது! மீறினால் லைசென்ஸ் Cancel!!

மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் இருமுடி நெய் அபிஷேகம் இன்று காலையுடன் முடிவடைந்து தொடர்ந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாளை (ஜனவரி 19) இரவு 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் ஜனவரி 20ம் தேதி நடை திறக்கப்பட்டு தரிசனம் இல்லாமல் சடங்குகளை செய்துவிட்டு மகரவிளக்கு பூஜைக்கான நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here