உயிரிழந்ததாக நாடகமாடிய பூனம் பாண்டே., இந்திய சினிமா சங்கம்  அதிரடி முடிவு., போலீஸ் நடவடிக்கை!!

0
உயிரிழந்ததாக நாடகமாடிய பூனம் பாண்டே., இந்திய சினிமா சங்கம்  அதிரடி முடிவு., போலீஸ் நடவடிக்கை!!
மாடலிங் துறையில் அறிமுகமான பூனம் பாண்டே பாலிவுட் சினிமாவில்  நடிகையாக அறிமுகமானார். கவர்ச்சி நாயகியாக திரையுலகில் வலம் வரும் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் உயிரிழந்ததாக சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்திருந்தார்.  அதாவது சில காலமாக கர்ப்ப வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவருடைய மேலாளர் மூலம் வெளியிட்டிருந்தார்.
தான் உயிரிழப்பதற்கு முன்பு வரை சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்த பூனம் எப்படி திடீரென உயிரிழக்க முடியும் என பலர்  கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் அவரது உடல்  நல்லடக்கம் செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர்  கருத்து தெரிவித்து வந்தனர்.இப்படி இருக்க நேற்று சோசியல்  மீடியாவில் நான் இறக்கவில்லை, மேலும் கர்ப்ப வாய் புற்றுநோய் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இவ்வாறு செய்தேன் என கூறியிருந்தார். இவ்வாறு போலியான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பூனம் பாண்டே மற்றும் அவரது  மேலாளர் மீது , மும்பை விரொளி காவல் நிலையத்தில் இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here