போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!

0
போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் - அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!
போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் - அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!

இனி தமிழகத்தில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்டாயம்:

தமிழக சட்டப்பேரவை சில நாட்களுக்கு முன் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அதன் இறுதி நாளான இன்று முத்தாய்ப்பான அறிவிப்புகள் துறை சார்ந்த அமைச்சர்களால் வெளியிடப்பட்டது. இதில், மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத் தகுந்த வகையில், 5 பவுன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யும் என்பதாகும்.

போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் - அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!
போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!

அது மட்டுமல்லாமல், அரசு பணி நியமனத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 லிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாட தாள் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதுபோக கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் - அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!
போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சரின் முத்தான அறிவிப்பு!!!

அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் உறுதி அளித்தார். தகவல் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக மடிக்கணினிகளை அதிகப்படுத்த 15 லட்சம் ஒதுக்கப்படும் என்றார். இது போக, கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி 1500 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தன்னுடைய தனி உரையின் போது அறிவித்தார். ஆனால், அதில் 535 அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here