கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடா??? – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

0

கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு ஏராளமானோர் தன் உயிரை பறிகொடுத்த நிலையில் அவர்களுக்கான மத்திய மாநில அரசுகள் இழப்பீடாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பொது நல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது. அந்த வழக்கின் முடிவில் நீதிமன்றம் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கிட உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக  பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த  நீதிமன்றம் தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளது. அதாவது அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்குவது குறித்து அரசுக்கு உத்தரவு விடுக்க முடியாது. மேலும் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்றம் தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல்  அரசின் கொள்கை முடிவு குறித்து பொது நல வழக்குகள் என்ற பெயரில் சிலர்  விளம்பரத்துக்காக போடப்படும் இது போன்ற வழக்குகள் வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here