சூரி ஹோட்டலுக்கு வந்த ரெய்டு.., வெளிவந்த மற்றொரு உண்மை.., அடக்கடவுளே இவருக்கா இப்படி ஒரு நிலைமை??

0
சூரி ஹோட்டலுக்கு வந்த ரெய்டு.., வெளிவந்த மற்றொரு உண்மை.., அடக்கடவுளே இவருக்கா இப்படி ஒரு நிலைமை??

கடந்த 2009 ஆம் ஆண்டு, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “வெண்ணிலா கபடி குழு”, இந்த படத்தில் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா, என பலர் நடித்திருந்தார்கள். மேலும் சூரிக்கும் “பரோட்டா சூரி” என பெயர் வந்ததும் இந்த திரைப்படத்தில் தான், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பரோட்டா காமெடி பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. இதையடுத்து “சூரி” மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் ஆனார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதையடுத்து அவர், அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் – சூரி காம்போ, தமிழ் சினிமாவில் வேற லெவல் தான். நடிகர் சூரி மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மதுரையில் “அம்மன் உணவகம்” என்ற பெயரில் ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல், மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

என்ன அழகுடா.., ஏஞ்சல் போல் கியூட்டாக இருக்கும் நித்யா மேனன்.., இளசுகளை கட்டி போட்ட புகைப்படம்!!

இந்நிலையில் இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், Commercial Tax officers அண்மையில் ரெய்டு நடத்தினர். அப்போது அம்மன் ஹோட்டல் தினசரி 25 ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகர் சூரியின் ஹோட்டலில் இப்படி ரெய்டு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here