இரவு வானத்தில் நடந்த வாணவேடிக்கை நிகழ்வு..!!!

0

நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் விண்வெளி வீரரான பாப் பெஹங்கென் , கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட C/2020 F3 neowise எனப்படும் வால்நட்சத்திரத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் . இவர் neowise -ன் புகைப்படங்களை வெளியிடும் போது கூறுகையில் ,’ நேற்று இரவு வானத்தில் நடந்த வாணவேடிக்கை நிகழ்வு ” எனக்குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த neowise எனப்படும் வாழ் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் கடந்து சென்றுள்ளது. அதாவது 0.29 வானியல் அலகுகளின் தூரம் (27 மில்லியன் மைல்கள் அல்லது 43.4 மில்லியன் கிலோமீட்டர்), இது நமது நட்சத்திரத்திலிருந்து புதனின் சராசரி தூரத்தை விட சற்று நெருக்கமானது.


இந்த வாழ் நட்சத்திரமானது நாசாவின் neowise எனப்படும் விண்கலத்தால் கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று கண்டுபிடிப்பட்டது. அனால் கடந்த ஒரு வாரமாக இந்த வாழ் நட்சத்திரம் விண்வெளி பார்வையாளர்களின் பார்வையில் பட்டு வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வெறும் கண்ணால் பார்க்க கூடிய ஒரே வாழ் நட்சத்திரம் இதுதான் என்பது குறிப்பிட தக்கது.

பிரபல விண்வெளி புகைப்படக்கலைஞரான கிறிஸ் ஸ்சுர் கூறுகையில் ,” பிரகாசமாக வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய மஞ்சள் நிறத்தில் மிகவும் அழகாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த neowise வாழ் நட்சத்திரமானது ஆறிக எனப்படும் விண்மீன் கூட்டத்தில் தற்போது உள்ளது.


இதன் எதிர்கால பிரகாசம் ஓரளவு நிச்சயமற்றதாகவே உள்ளது, ஆனால் வால்மீன் அதிகாலை வானத்தில் மட்டுமல்ல, அடுத்த வாரம் அதிகாலை வானத்திலும் காணக்கூடியதாக இருக்கும். விண்வெளி ஆர்வலர்களுக்கு இந்த வாழ் நட்சித்திரத்தின் வெளிப்பாடு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மக்கள் neowise ஐ அதிகாலை நேரத்தில் வெறும் கண்ணால் பார்த்து மகிழ்ந்து கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here