தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் படிக்காதவன். இப்படத்தில் காமெடி நடிகராக முதன்முதலில் ஒப்பந்தம் ஆனது வடிவேலு தான். தற்போது அவர் ஏன் இப்படத்தை விட்டு விலகினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பால் மாதிரி சும்மா பளிச்சுனு மின்னுறீங்களே ரகுல் ப்ரீத் சிங்.., மொத்த அழகையும் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
நகைச்சுவை நடிகர் வடிவேலு:
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை என மூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை வடிவேல் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த படிக்காதவன் படத்தில் நடிகர் வடிவேலு நடித்து விட்டு பாதியில் விலகியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, படிக்காதவன் படத்தில் விவேக் நடித்திருந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்திருந்தது வடிவேலு தான். இந்த படத்தில் வில்லன் நடிகர் சுமன் கால்களை பிடித்து நடிப்பது போல் நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிக்கு நடிகர் வடிவேல் சுமன் கால்களை பிடிக்க மாட்டேன் என்று கூறி இயக்குனர் சொல் பேச்சை கேட்காமல் தனது போக்கில் நடந்து கொண்டார். மேலும் இதனால் தனுசுக்கும் வடிவேலுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதால் படத்தை விட்டு விலகினார் என்று முக்கிய நடிகர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்