திருமண வாழ்க்கை சரியில்லை – விவாகரத்து பெற முடிவு! பிரியங்கா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையான பிரியங்கா, தனது திருமண வாழ்க்கை சரியில்லாததால் விரைவில் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவாகரத்து முடிவு:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா. வடிவேல், விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர், சில காலங்களாக படம் ஏதும் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் தனது பிள்ளைகள்  வேண்டுகோளை ஏற்று சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து இவர், கன்னத்தில் முத்தமிட்டால் என்ற ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் மிரட்டல் வில்லியாக நடித்து வருகிறார். இது போக, வித்யா நம்பர் 1 என்ற சீரியலில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். தற்போது, இவர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, தனது திருமண வாழ்க்கை சரியில்லை என்றும் அதனால், விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் அம்மா புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரின் மருத்துவ சிகிச்சைகளுக்கு கூட கையில் பணம் இல்லாமல் அல்லாடுகிறேன் என்றும் தெரிவித்தார். நடிகையின் இந்த பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here