அப்போ தளபதி.. இப்போ தலயா?? பிரபல நகைச்சுவை நடிகர் எடுத்த புதிய அவதாரம்!!!

0

காமெடி நடிகர் மயில் சாமீ, சில நாட்களுக்கு முன்பு பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் கதாபாத்திரத்தில் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆனது. அதை தொடர்ந்து நடிகர் அஜித் போல கோட் சூட் அணிந்து தற்போது ஒரு போட்டோ ஷூட்டை மயில் சாமீ நடத்தியுள்ளார்.

நடிகர் மயில் சாமி, இவரை தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கமுடியாது. இவர் உத்தம புத்திரன், தூள், காசு மேல காசு, விசில் என பல படங்கள் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி மக்களுக்கு வெள்ளம், கொரோனா தொற்று பாதிப்பு போன்ற சமயங்களில் சத்தமில்லாமல் ஏனைய உதவிகளை செய்தவர். அரசியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்கள் வித விதமாக போட்டோ ஷூட் செய்வது வழக்கம். ஆனால் நடிகர் மயில் சாமியின் போட்டோ ஷூட் சற்று வித்தியாசமாக இருக்கும். இதற்கு முன்பு மயில் சாமி, விஜயின் பிகில் ராயப்பன் லுக்கில் போட்டோஷூட் நடத்தினார். தற்போது நடிகர் அஜித் போல் கோட் சூட் அணிந்து கையில் குடையுடன் கூல்லாக போஸ் கொடுத்துள்ளார்.

மயில் சாமியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here