300 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மரணம்.. திரையுலகத்தினர் அஞ்சலி!

0
300 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகர் மரணம்.. திரையுலகத்தினர் அஞ்சலி!

ஜெகன் மோகினி படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த கடாலி ஜெய சாரதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மரணம்:

கடந்த 1978-ம் ஆண்டு தெலுங்கில் விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான படம் ஜெகன்மோகினி. இதன் தமிழ் ரீமேக்கில் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் பதிந்தவர் தான் பழம்பெரும் காமெடி நடிகர் கடாலி ஜெய சாரதி. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் கிட்டத்தட்ட 372 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தார். தற்போது 82 வயதுடைய அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இவர் தற்போது அந்த சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்களும், சினிமா துறையை சேர்ந்தவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரங்களில் தொடரும் மரணங்கள் பெரும் சோகத்தை திரையுலகத்தினருக்கு ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here