சூரியுடன் பரோட்டா காமெடி சீனில் நடித்த நடிகர் திடீர் மறைவு., இரு சிறுநீரகங்களும் செயலிழந்த சோகம்!!

0
சூரியுடன் பரோட்டா காமெடி சீனில் நடித்த நடிகர் திடீர் மறைவு., இரு சிறுநீரகங்களும் செயலிழந்த சோகம்!!
சூரியுடன் பரோட்டா காமெடி சீனில் நடித்த நடிகர் திடீர் மறைவு., இரு சிறுநீரகங்களும் செயலிழந்த சோகம்!!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரும், முன்னணி காமெடியனுமான நடிகர் ஹரி வைரவன் திடீரென இன்று காலை உடல் நல குறைவால் உயிரிழந்தார்.

அதிர்ச்சி மறைவு:

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தின் பரோட்டா சாப்பிடும் சீனில், நடித்து பரோட்டா சூரி என பெரிய அளவில் காமெடியனானவர் நடிகர் சூரி. இவருடன் சேர்ந்து, இந்த பரோட்டா போட்டியில் பங்கேற்பவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படம் போக நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த சில மாதங்களாக இரு சிறுநீரகங்களும் செயலிழந்து, நடக்க முடியாத நிலையில், சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் ஹரி வைரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பண உதவி செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் ஹரி வைரவன் திடீரென உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here