வடிவேலுக்கு டஃப் கொடுக்க மீண்டும் ரீஎன்ட்ரியாகும் அந்த காமெடி நடிகர்.., அப்ப ஒரு சம்பவம் இருக்கு!!

0
வடிவேலுக்கு டஃப் கொடுக்க மீண்டும் ரீஎன்ட்ரியாகும் அந்த காமெடி நடிகர்.., அப்ப ஒரு சம்பவம் இருக்கு!!
வடிவேலுக்கு டஃப் கொடுக்க மீண்டும் ரீஎன்ட்ரியாகும் அந்த காமெடி நடிகர்.., அப்ப ஒரு சம்பவம் இருக்கு!!

முன்னாள் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை குறித்து முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நடிகர் கவுண்டமணி:

திரையுலகில் தன்னுடைய நகைச்சுவை கலந்த கவுண்டர்களால் ரசிகர் மனதில் தற்போது வரை நிலைத்து நிற்பவர் தான் நடிகர் கவுண்டமணி. 90ஸ் காலகட்டத்தில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்த போதிலும் அவருக்கு மட்டும் மார்க்கெட் குறையாமல் இருந்து வந்தது. மேலும் கவுண்டமணி-செந்தில் காம்போ தான் அந்த காலத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இவர்கள் இணைந்து எக்கசக்க படங்களில் நடித்துள்ளனர். அத்தனை படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து தனக்கு இருந்த உடல்நலக்குறைவால் சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்டார். இருப்பினும் ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க தொடங்கினார். அதாவது கடந்த 2015ம் ஆண்டு வெளியான 49ஓ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு சில பல காரணத்தால் திரும்பவும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் திரையுலகில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

கிடைத்த வாய்ப்பில் சந்தியாவை அசிங்கப்படுத்திய அர்ச்சனா.., சப்போர்ட் செய்யும் சிவகாமி.., இன்றைய ராஜா ராணி 2 !!

அதாவது ‘பேய காணோம்’ படத்தை இயக்கிய அன்பரசன் படைப்பில் உருவாக இருக்கும் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் கவுண்டமணி நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் கவுண்டமணி நடிக்க ஆரம்பிச்சுட்டா வடிவேலு மற்றும் இப்போது இருக்கும் காமெடி நடிகர்கள் டாட்டா காட்டிட்டு போக வேண்டியது தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here