கவுண்டர் நாயகனின் பிறந்தநாள்..,அம்மாடி.., கவுண்டமணி சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

0
கவுண்டர் நாயகனின் பிறந்தநாள்..,அம்மாடி.., கவுண்டமணி சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
கவுண்டர் நாயகனின் பிறந்தநாள்..,அம்மாடி.., கவுண்டமணி சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் முடிசூடா மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அவர் , மற்றவர்களை கலாய்க்கும் விதமாக பலவித கவுண்டர்களை கொடுத்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவருடன் சேர்ந்து செந்திலும் இணைந்து நடித்த படங்கள் அதிகம் பேசப்பட்டது. அவர்களின் காம்போ 90ஸ் கிட்ஸை கட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் காமெடி காம்போ தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. தற்போது வரை அவர்களின் காம்போவை மிஞ்சும் அளவுக்கு எந்த காம்போவும் வரவில்லை என்றால் அது மிகையாகாது. இதுவரை கவுண்டமணி 300 படங்களுக்கு மேல் காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இது போன என்ன., அடுத்து தரமான கம்பேக் கொடுப்போம்., கூலாக பேசிய லக்னோ அணி உரிமையாளர்!!!!

தற்போது இவர் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று அவர் தனது 84 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கவுண்டமணி, 40 கோடி முதல் 50 கோடி வரை சொத்துக்கள் வைத்து தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here