நிக்கவே தெம்பில்லை., அதை செய்ய சொன்னா அழுவாரு., பயில்வானை பங்கமாக கலாய்த்த டெலிபோன் ராஜ்!!

0
நிக்கவே தெம்பில்லை., அதை செய்ய சொன்னா அழுவாரு., பயில்வானை பங்கமாக கலாய்த்த டெலிபோன் ராஜ்!!
நிக்கவே தெம்பில்லை., அதை செய்ய சொன்னா அழுவாரு., பயில்வானை பங்கமாக கலாய்த்த டெலிபோன் ராஜ்!!

தமிழ் திரையுலகில் மக்கள் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் டெலிபோன் ராஜ். வைகை புயல் வடிவேலுடன் இணைந்து இவர் நடித்திருந்த ”அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்ற காமெடி சீன் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கலைஞராக நடித்து வரும் இவரிடம், சில வருடங்களுக்கு முன் பிசாசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பயில்வான் வம்பிழுத்துள்ளாராம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது கருப்பு உடை போட்டு வந்த இவரை பிசாசு என கூறியுள்ளார். அதற்கு இவர் பிசாசு கருப்பு மட்டுமல்ல உங்களை போல பிங்க் கலர் சட்டை கூட போடும் என கூறி பயில்வானை nose cut செய்துள்ளாராம். இதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் பயில்வான் குறித்து டெலிபோன் ராஜ் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…, இத மிஸ் பண்ணிடாதீங்க…, வெளியான முக்கிய தகவல்!!

அதில் அவர் கூறியதாவது, படத்தில் நடிக்கும் போது ஒரு வசனத்தை கூறி பேச சொன்னால் பயில்வான் கண்ணில் இருந்து நீர் வடியும். மேலும் அவரால் நிமிர்ந்து நிற்க கூட முடியவில்லை. மேலும் அவர் குடும்பத்தை கவனித்து கொள்ள பண தேவை இருப்பதால் youtube சேனல் காரர்களிடம் ஒரு வீடியோவிற்கு 500 முதல் 2000 வரை பணம் வாங்கி கொண்டு இஷ்டத்துக்கு பேசி வருகிறார். இப்படி சம்பாதிக்கும் காசை வைத்து,தன் வீட்டை கவனித்து கொள்கிறார் என பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here