நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
தமிழ் சினிமாவில் ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் சேசு. 60 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் இன்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here