கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இனி கவலையே இல்லை – யுஜிசி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

0
கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இனி கவலையே இல்லை - யுஜிசி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரி கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை யுஜிசி அதிரடியாக வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

நாட்டிலுள்ள அனைத்து  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உயர்கல்வி பயில முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள், பெரிய வாய்ப்புகளுக்காக ஜே.இ.இ, ஜே.இ.இ மெயின் உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளை எழுதுவார்கள்.

அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்ததும், தாங்கள் அட்மிஷன் போட்ட கல்லூரி அல்லது பல்கலையில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி முதலாமாண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியில் வெளியேறினாலும், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இவர்களது சேர்க்கையை ரத்து செய்த பிறகு, தனியாக எதுவும் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திரும்பி தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here