தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் தானா? பேராசிரியர் திடுக்கிடும் தகவல்!!!

0
தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு தேர்தலுக்கு முன் தானா? பேராசிரியர் திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் பாரதியார் உட்பட பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பு 2024 ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வர இருப்பதாக வட்டாரங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர். அப்படி அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில், அதற்கு முன்னதாகவே கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அண்மையில் அறிவித்து இருந்தார்.

அரசு நடத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…, இந்த தேதியில் இருந்து துவக்கம்!!

இந்நிலையில் இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ”தற்போதைய சூழலில் செமஸ்டர் தேர்வுக்கான பாடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதன்பின் மாதிரி தேர்வுகள், செய்முறை தேர்வுகள் என ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். அதற்குள் பல்கலை தேர்வுகளை நடத்தி முடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று தான்.” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்நோக்கி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here