‘என்ன ஒரு அலட்சியம்’ – தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!!

0

தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி குழந்தைகளை கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளுக்கு அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

கொரோனா:

கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா கடந்த சில நாட்களாகவே அளவுக்கு அதிகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே அதிகமாக பரவி வருகிறது. இதனால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு அஞ்சி வருகின்றனர். குறிப்பாக கும்பகோணம் பகுதியில் தான் பள்ளி மாணவர்கள் இடையே கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பல மாணவர்கள் கொரோனவால் தாக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகள் பேரிடர் மேலாண்மை சட்டத்தை பின்பற்றாமல் நடந்து வந்தது. இவர்கள் இப்படி அலட்சியமாக இருந்ததால் தான் கொரோனா பரவுகிறது என்று கோபப்பட்ட மாவட்ட ஆட்சியர் அந்த இரண்டு தனியார் பள்ளிகளுக்கும் அபராதம் விதித்தார். அதன்படி தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளிக்கு ரூ.5,000 மற்றும் கும்பகோணம் சரஸ்வதி பள்ளிக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் இந்த இரண்டு பள்ளிகளும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை முறையாக கடைபிடிக்காத காரணத்தினால் இந்த இரண்டு பள்ளிகள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் அரசு பள்ளிகளிலும் தான் கொரோனா பரவியது. ஆனால் அப்போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் ஏன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் எடுக்கின்றனர் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here