தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு அதிக அபராதம் – காரணம் இதுவா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு அதிக அபராதம் - காரணம் இதுவா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு அதிக அபராதம் - காரணம் இதுவா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அரசின் ஆணைப்படி தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு சார்பில் 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழில் நிறுவனங்களில் தமிழ் முதன்மை மொழியாக வைக்கப்பட்ட பெயர் பலகை தான் வைத்திருக்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கவில்லை என ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் – வெளியான ஆய்வறிக்கை!

அதில் கர்நாடகா போன்ற மாநிலங்களில் வணிக நிறுவன பெயர் பலகைகள் தாய்மொழியில் இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்கள் பெரியதாகவும், தமிழ் எழுத்துக்கள் சிறியதாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகை கடைகளில் வைக்க வேண்டும் எனவும், அதனை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழகத்தில் அரசு ஆணையின் படி கடைகள், தொழில் நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை இல்லாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் எனவும், முதல் முறை ஒரு தொகையும், அந்த தவறை மீண்டும் செய்தால் அதிக தொகை அபராதமாக விதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த நடவடிக்கை பற்றி அரசு நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here