Monday, August 2, 2021

வட கொரியாவில் நிலவும் உணவு பஞ்சம்… ஒரு காப்பி பாக்கெட் விலை ரூ.7,000,ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300!!!

Must Read

கொரோனா பிடியில் அனைத்து நாடுகளும் சிக்கி தவித்த நிலையில் தங்களின் நாட்டில் அப்படி எந்த வித தொற்றும் இல்லை எனக்கூறி வந்த வட கொரியா தற்போது அதை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வட கொரியா கொரோனா, சூறாவளி போன்ற இயற்கை நிகழ்வுகளால் மிக மோசமான  உணவுப் பஞ்சத்தை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கடுமையான விலைவாசி அதிகரிப்பையும் கண்டு உள்ளது.

வட கொரியா அமெரிக்கா உடன் ஆயுத சோதனை நடத்தி அந்த நாடு உடன்  மோதலை உருவாக்கி கொண்டது. அதை தொடர்ந்து வட கொரியா தன்னை எந்த நாட்டுடனும் சேர்த்து கொள்ளாமல் அதுவாக தனித்து இருந்து வருகிறது. இதனால்  உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானது. மேலும் கொரோனாவால் உலகம் முழுவதும் அவதிப்பட்டு வந்த நிலையில் இப்படி ஒரு தொற்று எங்கள்  நாட்டில் இல்லை என மார்தட்டி கொண்டிருந்த வட கொரிய அரசு தற்போது தங்கள் நாட்டிலும் அந்த தொற்று இருப்பதாக ஒத்துக்கொண்டது. மேலும் அதை தொடர்ந்து அங்கு மிக மோசமான உணவு பஞ்சமும் சேர்ந்து கொண்டுள்ளது.

 

அதாவது வட கொரிய மக்கள் உணவை 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உண்பதாகவும்,  மேலும் ஒரு சிறிய காபி பாக்கெட்டின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.7,000 ஆகவும் , பிளாக் டீ ரூ.5,167 ஆகவும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300 ஆகவும் வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த உணவு பஞ்சத்தோடு விலைவாசி உயர்வும் சேர்ந்து அந்த நாட்டின் மக்களின் நிலைமையை மிக மோசமாக மாற்றி உள்ளது. மேலும் இதை ஒத்துக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன், இந்த சூழ்நிலையை திறமையாக கையாள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறியதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -