தமிழக அரசின் இந்த வேலைக்கு ஆட்கள் தேவை.., நெறிமுறைகள் இதுதான்.., வெளியான அறிவிப்பு!!

0
தமிழக அரசின் இந்த வேலைக்கு ஆட்கள் தேவை.., நெறிமுறைகள் இதுதான்.., வெளியான அறிவிப்பு!!
தமிழக அரசின் இந்த வேலைக்கு ஆட்கள் தேவை.., நெறிமுறைகள் இதுதான்.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாணவ குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் சென்னை, மதுரையை தொடர்ந்து அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இத்திட்டத்திற்கான உணவு தயாரிப்பதற்கு தேர்வு செய்ய உள்ளனர். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு., அதிர்ச்சி தகவல்!!!

அதன்படி,

  • அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட சுய உதவி குழுவில் தொடர்ந்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • அந்த தொடக்கப்பள்ளிகளுக்கு அருகாமையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், சமைப்பதில் ஆர்வம் மற்றும் அறிவுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் சொந்தமாக ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும்.
  • அவர்கள் வேலை செய்யும் பள்ளியிலே அவரது குழந்தைகள் படிக்க வேண்டும் என நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here