தமிழக ரேஷன் கடைகளில் வர இருக்கும் புதிய மாற்றம்.., எப்போது அமலுக்கு வரும்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மலிவு விலையில் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பண்டிகை நாட்களின் போது பல சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் இது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு தற்போது வரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தென்னை விவசாயிகள் இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில்கள் இறக்குமதி செய்யப்பட்டு அது தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக தமிழகத்தில் விளைவிக்கும் பொருளை வைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் அல்லது கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் அனைவரும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் போலீசார் அவர்களை கைது செய்த பின் போராட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கூடிய விரைவில் தமிழக அரசு இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here