நிவேதா பெத்துராஜ் பிரைடு ரைசில் கரப்பான் பூச்சி: ஹோட்டலுக்கு தடை விதித்த அதிகாரிகள்!!!

0
ஒரே ஒரு துண்டை போர்த்தி.. முக்கால் வாசி முன்னழகை காட்டி அலற வைத்த நிவேதா பெத்துராஜ்!!
ஒரே ஒரு துண்டை போர்த்தி.. முக்கால் வாசி முன்னழகை காட்டி அலற வைத்த நிவேதா பெத்துராஜ்!!

ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் என முன்னனி நடிகர்களோடு நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ஆன்லைனில் ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடந்ததாக ஒரு போட்டோவை பகிர்ந்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

நிவேதா பெத்துராஜ், இவர் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகினார். அதை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் என சில படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்விக்கி செயலி மூலம் சென்னையில் உள்ள ஒரு பெரிய உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்ததாகவும், அந்த உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவர் உணவு வாங்கிய ஹோட்டலுக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

மேலும் குறைகளை நிவர்த்தி செய்து மூன்று நாட்களுக்குள் புகைப்படத்துடன் சமர்ப்பிக்கவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here