படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே லீக்கான கோப்ரா படத்தின் கதை – அதிர்ச்சியில் விக்ரம் படக்குழு!

0
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே லீக்கான கோப்ரா படத்தின் கதை - அதிர்ச்சியில் விக்ரம் படக்குழு!

நடிகர் சியான் விக்ரம் நடித்து வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்து தற்போது வைரலாகி வருகிறது.

கோப்ரா திரைப்படம்:

தமிழ் சினிமா வட்டாரங்களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். படத்துக்காக உடலை வருத்தி நடிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருப்பது விக்ரம் மட்டுமே. அந்த வரிசையில் இவர் நடித்த ஐ, அந்நியன் போன்ற படங்கள் அடங்கும். இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா. தற்போது இப்படத்தின் கதை சுருக்கம் இணையத்தில் கசிந்து தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ‘ பிரபல துருக்கி இன்டர்பூல் அதிகாரி ஒருவர், உலகில் மிகப்பெரிய அரசியல்வாதி தலைவர்களை தடையமே இல்லாமல் கொலை செய்யும் குற்றவாளியை தேடி வருகின்றார். அதன் பிறகு கோப்ரா குற்றவாளி பற்றிய பல தடயங்களும் ஆதாரங்களும் இவருக்கு கிடைக்கின்றன. மீதமுள்ள கதை கோப்ரா செய்யும் கொலைக்கான காரணமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது கதை வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here