ரியல் சிங்க பெண்ணாக ஜார்கண்டின் அகான்ஷா குமாரி – நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் இந்தியாவின் முதல் மகளிர் பொறியாளரானார்!

0

நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த  அகான்ஷா குமாரி பெற்றுள்ளார்.

முதல் பெண் பொறியாளர்:

ஜார்கண்ட் மாநிலத்தின், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பார்காகான் என்ற நகரில் வசித்து வருபவர் அகான்ஷா குமாரி.  தனது இளம் வயது முதல் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை பார்த்து, இதில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டார்.  இதனை அடுத்து, பொறியியல் பட்டம் பெற்ற அகான்ஷா குமாரி, ஹசாரிபாக் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளராக சேர்ந்துள்ளார்.


இதையடுத்து, இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் முதல் பெண் பொறியாளர் என்ற சிறப்பையும், பெருமையையும் அகான்ஷா குமாரி பெற்றுள்ளார். இதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  மேலும், இதோடு சேர்த்து பெண் ஆற்றலுக்கு தலை வணங்க வேண்டும் என்ற ஹேஸ்டேக்ல் இவரது இந்த செயல் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத் தகுந்தது.


இது குறித்து அந்த நிறுவனத்தில் உள்ளோர் தெரிவித்ததாவது, இந்த சுரங்கத்தில் இதுவரை பெண்கள் மருத்துவர், உதவியாளர், கனரக வாகனங்களை இயக்குதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலை பார்த்து வந்தனர்.  அனால், ஒரு பெண் பொறியாளர் பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.  மேலும், அவரது இந்த செயல் போராடும் பெண்களுக்கு உந்துசக்தியாக உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here