மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு., முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

0
மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள்,  அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து கல்வி நிலையங்களிலும் மதியம் தோறும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து உணவுகளை அரசு சார்பில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை   குறித்து ஒரு முக்கிய அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதாவது 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்ட செலவீனத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு குழந்தைக்கான உணவூட்ட செலவிடும் நாள் ஒன்றுக்கு 2.39 ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ஒரு பயனாளியின் அடிப்படையில் ரூ‌1.33 எனவும் உப்பு உள்ளிட்ட தாளித்த பொருட்களுக்கான செலவீடு ரூ.0.46 எனவும் எரிபொருளுக்கான செலவினம் ரூ0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here