கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு – முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு!!!

0

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் தலா ரு.5 லட்சம் வைப்பீடு தொகை ஒதுக்கப்படும். அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் அந்த தொகை வட்டியோடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் அக்குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

அக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு காப்பகம் மற்றும் விடுதிகளில் சேராமல் உறவினர் வீட்டில் அக்குழந்தை தங்கினால்,பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் அக்குழந்தை 18 வயதை அடையும் வரை ரு.3000 வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

இதுகுறித்த  வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட, கூடுதல் தலைமைச்செயலாளர், நிதித்துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறைச்செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது கோவிட்19 தொற்றால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ள நிலையில், தமிழக அரசு அந்த ஆதரவற்ற குழந்தைகளைளின் நிலையை உணர்ந்து பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here