Friday, March 29, 2024

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா – மருத்துவக்குழுவுடன் நாளை மறுநாள் ஆலோசனை!!

Must Read

கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் முடியவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களாக அனைவரும் பொது முடக்கத்தில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலமாக கொரோனா பரவல் இருக்காது என்றும் நம்பப்பட்டது. அதன் பகுதியாக கடந்த சில மாதங்களாக படிப்படியாக பொது முடக்கம் தளர்வுகளுடன் அமல் படுத்தப்பட்டது.

கடந்த மாதம் தமிழக முதல்வர் பழனிசாமி சில தளர்வுகளுடன் பொது முடக்கம் பற்றி அறிவிப்பு ஒன்றை அளித்தார். அதில் இந்த 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். அந்த பொது முடக்கம் முடிய சில நாட்களே உள்ளன.

மறுபடியும் இருக்குமா??

இந்த நிலையில், மேலும் பொது முடக்கம் இருக்குமா என்று அனைவர் சார்பிலும் கேள்விகளாக கேட்கப்பட்டது. இது குறித்து நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசிக்க உள்ளார், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!

lockdown in TN??
lockdown in TN??

அதற்கு முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசிக்க உள்ளார். நாளை நடக்கவுள்ள இந்த காணொளி கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் , அமைச்சர்களும் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குடத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், செயப்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு., ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் தொடங்க இருப்பதால், அரசியல் கட்சிகள் பலவும் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -