முதல்வர் கெஜ்ரிவால் உடல் எடை கிடுகிடுவென குறைவு? சிறையில் வைத்ததால் தான்? ஆம் ஆத்மி புகாருக்கு விளக்கம்!!!

0
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, அவரை திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைத்து வைத்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் உடல் எடை 4.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சிறை அதிகாரிகள், “முதல்வர் கெஜ்ரிவால் சிறைக்கு வந்தது முதல், இப்போது வரை உடல் எடை 65 கிலோவாக உள்ளது. அவருக்கு நீதிமன்ற அறிவுரையின் படி, வீட்டில் சமைத்த உணவு தான் வழங்கப்படுகிறது. அப்படி உடல்நிலை சார்ந்த அவசர சூழல் ஏற்பட்டால் கூட, உடனடி சிகிச்சை வழங்க மருத்துவர் குழு தயாராக உள்ளது.” என விளக்கமளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here