Friday, April 19, 2024

மதுரை வரும் தமிழக முதல்வர் – கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு!!

Must Read

மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என்று அதனை குறித்து ஆய்வு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 6 ஆம் தேதி ஆய்வு நடத்த உள்ளார்.

மதுரையில் கொரோனா:

கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது, மாவட்ட ஆட்சியர்கள், அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவரும் தீவிரமான தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதற்கிடையில், நேற்று அமைச்சர் செல்லூர் ராஜா, மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர்கள் ஆய்வு:

அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ” தென்தமிழகத்தின் தலைநகரான மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது, ஆனால், தற்போது சரியான வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதால், மதுரைமாவட்ட மக்கள் நலமாக தான் உள்ளனர். 21 கோவிட் கேர் சென்டர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக்கிழைமை முழு ஊரடங்கு ரத்து – மாநில அரசு அதிரடி!!

வேளாண்மை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை இவை அனைத்தும் மக்களுக்கு சேவை செய்ய தயார் நிலையில் உள்ளது. இப்பொது கல்லூரிகள் திறக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக தகவல் தொழில் நுட்பத்துறை (எல்காட்) இல் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் வருகை:

இதற்கிடையில், தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி, வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை வர உள்ளார். மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உள்ளார். பின், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிக்கவும் உள்ளார்.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 591 படுக்கைகளும் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் 4,000 படுக்கைகளும் தயார்நிலையில் உள்ளன, என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -